tamilnadu

காகிதப் பை தயாரிக்க இலவச பயிற்சி

ஈரோடு, மே 24-ஈரோடு கனரா வங்கித் தொழில் பயிற்சி நிலையம் சார்பில் காகித பை தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஈரோடு கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகேஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மே 27ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம்தேதி வரை காகிதப் பைமற்றும் கவர் தயாரிப்புபயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.வறுமை கோட்டுக்குகீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.