ஈரோடு, டிச.21- உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலை யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்த லானது டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதி களில் இரண்டு கட்டமாக நடைபெற உள் ளது. இத்தேர்தலின் போது பாதுகாப்பு பணி யில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத் தப்பட உள்ளனர். எனவே, பாதுகாப்பு பணி யில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான்ஸ் பவன் 3-வது தளத்தில் இயங்கிவ ரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகி யவற்றுடன் நேரில் சென்று தங்களது விருப்ப விண்ணப்பத்தை சமர்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.