திண்டுக்கல், ஜூன் 25- திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைக் கட்டுப்படுத்தவும், வெளியூர்களிலி ருந்து வருபவர்களைக் கண்காணிக்கவும் 49 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரை திருச்சிராப்பள்ளி சாலை, கரூர் சாலை, பழைய கரூர் சாலை, தேனி சாலை, பழனி சாலை, மதுரை சாலை, நத்தம் சாலை என மொத்தம் ஏழு இடங்களில் சோதனை சாவடி கள் உள்ளன. காட்டுப்பாதையில் வருவோரை கண்ட றிய கூடுதலாக சோதனைச் சாவடிகளை அமைக்க காவல் கண்காணிப்பாளர் சக்தி வேல் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட் டம் முழுவதும் 29 சோதனை சாவடிகள் கூடு தலாக அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரு பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை செய்வதற்காக லிங்கவாடி, கோட்டையூர், பொய்யம்பட்டி, கள்ளர்மடம், அணைப்பட்டி, நாகையகவுண்டன்பட்டி, கெங்குவார்பட்டி, செங்குறிச்சி உள்பட 12 இடங்களில் சோதனைசாவடிகள் அமைக் கப்பட்டுள்ளனர். கூடுதலாக காவல்துறை யினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சோதனை சாவடி களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.