tamilnadu

img

அக்.1 முதல் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யலாம்! - தமிழ்நாடு அரசு

அரசு ஊழியர்கள், ஈட்டிய விடுப்புகளில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஈட்டிய விடுப்புகளில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வரும். இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த நடைமுறை முன்கூட்டியே வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.