திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுவதையொட்டி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் ஜெயராஜ், மாநில பொருளாளர் கணேசன், மாவட்ட தலைவர் ஜான் வில்சன், மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் எஸ்தர் லதா, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.