1ம் பக்கத் தொடர்ச்சி....
குடிநீர், இலவசமாக பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சதுரங்கம், சிலம்பம் உள்ளிட்ட கலைகள், விளையாட்டுக்கள் எந்த கட்டணமுமின்றி இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வராத நிலை உள்ளது. இதனை மாற்றுவதற்கான புதிய திட்டம் வகுத்தோம். அதற்காக ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க முன்வந்தோம். இன்றைக்கு எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்துள்ளோம்.
இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி இருந்தாலும் எங்கள் பள்ளியை அரசு பள்ளி என்று சொல்வதற்கு பதிலாக மார்க்கெட் ஸ்கூல் என்று தான் பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அந்த ஆதங்கம் எங்களுக்கு இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் எங்களது பள்ளிக்கு மேலும்மாணவ, மாணவியர்கள் வருகை தர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின் போது உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர்கள் நாகராணி, சந்திரகலா, சுகந்தி, ஃபுளோரா, மணியம்மாள், ராஜேஸ்வரி, ஞானராஜ் ஆகியோரும் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவிகள் ராஜேஸ்வரி, தனுஜா மற்றும் அவர்களது பெற்றோர்களும் உடனிருந்தனர்.