தருமபுரி, நவ.2- 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்து வர்களை தமிழக அரசு இடமாற்றம் செய் துள்ளது. மத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் வெள்ளி யன்று தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்று பணிக்கு திரும்பினர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடு பட்ட மருத்துவர்கள் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், காரி மங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரு மான ரங்கசாமி, புதுக்கோட்டை மாவட்டத் திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதே போல் மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவருமான வெங்கடேசன், நாகப்பட்டினம் மாவட்டத் திற்கும், மாநில ஒருங்கிணைப்பாளரும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ ருமான லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தற் போது மேலும் 2 மருத்துவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இலளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரான வாசுதேவன் திருவாரூர் மாவட்டத்திற்கும், ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கங்காதரன் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இது தவிர மேலும் சில மருத்துவர்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என கூறப் படுகிறது. இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.