பென்னாகரம், ஆக.1- பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப் பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் அதிகாரிகளின் அலட்சியம் கார ணமாக சுகாதார சீர்கேட்டு மைய மாக மாறியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயி ரத்திற்கு பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்களாகி யும் ஆளும் கட்சி பிரமுகர் டெண் டர் எடுத்த காரணத்தால் பணி செய்யாமல் கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்நிலையில் அதிகாரிகளின் அழுத்தம் கார ணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொது கழிப்பிடத்தை முறையாக பரா மரிக்க பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பொது கழிப்பிடத்திற்கு உள்ளே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்த வண்ணம் திரும்பி செல்கின்றனர். மேலும் பொதுக் கழிப்பிடத்திற்கு முன் பகுதி யில் சாக்கடை கால்வாய் உள் ளது. இதில் நகரத்தில் உள்ள பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவு கள் அந்த கால்வாயில் அடைக் கப்பட்டு துர்நாற்றம் வீசி வரு கிறது. சாக்கடை கால்வாயை தாண் டித்தான் கழிப்பிடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் ஆண்கள் செல்லும் கழிப்பிட பகுதியில் ஒரு படிக்கட்டு கூட அமைக்காமல் சாக்கடை கால் வாயை தாண்டிச் செல்லும் அவல நிலையில் தான் பொதுக்கழிப் பிடம் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக ஒப் பந்ததாரர் ஏனோ தானோ என்று கழிப்பிடத்தைக் கட்டி முடித்துள் ளனர். மேலும் கழிப்பிடத்தில் இருந்து வரக்கூடிய கழிவு நீர் இந்த சாக் கடை கால்வாயில் வந்து விழு மாறு கட்டப்பட்டுள்ளது. அத னால் அப்பகுதியில் உள்ள வணி கர்கள் மற்றும் பொதுமக்கள் துர் நாற்றத்தின் காரணமாக அப் பகுதியை கடந்து செல்ல முடியா நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பொது கழிப் பிடத்தை சுத்தம் செய்ய வேண் டும். சாக்கடை கால்வாயை தூர் வாரி மூடிகள் கொண்டு மூட வேண்டும். ஆண்கள் செல்லும் கழிப்பிட பகுதியில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.