தருமபுரி, மே 26-நல்லம்பள்ளி அருகே தோக்கம்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்து வருவதை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தோக்கம்பட்டி கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செல்போன் கோபுரத்தால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் செல்போன்கோபுரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள்மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.