புதுதில்லி,மே.13- சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்ற சிபிஎம்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் முன்னறிவிப்பின்றி இன்று காலை வெளியாகியுள்ளது.
மாணவர்கள் results.cbse.nic.in, cbse.gov.in, results.digilocker.gov.in, www.umang.gov.in என்ற இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் இந்த தேர்வில் மொத்தம் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.64% மாணவிகளும், 85.70% மாணவர்களும், 100% மாற்றுப்பாலின மாணவர்களும் இந்த தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மண்டல வாரியாக பார்த்தால் 99.60% தேர்ச்சி விகிதம் பெற்றும் விஜயவாடா முதல் இடத்திலும், 99.32% பெற்று திருவனந்தபுரம் 2அவது இடத்திலும், 97.39% பெற்று 3ஆவது இடத்திலும், 95.95% பெற்று பெங்களூரு 4ஆவது இடத்திலும், 95.18% பெற்று தில்லி 5ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தாண்டு தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 0.41% அதிகரித்துள்ளது.