tamilnadu

img

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலை, செப்.3- செங்கம் பகுதியில் புதி தாக அமைக்கப்படும்  மது பானக் கடைக்கு எதிர்ப்பு  தெரிவித்து பள்ளி மாணவி கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த  நாயக்கன் பேட்டை யில் புதிதாக அரசு மது பானக்கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அங்கு அமைந் துள்ள தனியார்  மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவிகள் மற்றும் ஆசிரி யர்கள் நூற்றுக்கும் மேற்  பட்டோர் செங்கம் வட்டாட்சி யர் பார்த்தசாரதியை சந்தித்தனர். அப்போது, எங்கள் பள்ளி  அருகில் மதுபானக் கடை  அமைக்கக் கூடாது என மனு  கொடுத்தனர். இதை பெற்றுக்  கொண்ட வட்டாட்சியர்  பரி சீலனை செய்வதாக மாண விகள் மற்றும் ஆசிரி யர்களிடம் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து மாணவி கள் கலைந்து சென்றனர்.