tamilnadu

img

விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் அமைக்க எதிர்ப்பு கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

சேலம், பிப்.18- விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று சேலம், சங்ககிரி வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில்  விளைநிலங்களில்  எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு  (ஐடிபிஎல்)  விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து பல கட்ட போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்  இருகூர் முதல்  தேவன் கொந்தி வரை மேற்கொள்ளப்பட வுள்ள நிலையில்,  விவசாயிகள் இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சங்ககிரி  சுற்றுவட்டார பகுதிகளில் இத்திட்டத் திற்கு விவசாயிகள் முழுமையாக  எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று சங்ககிரி வருவாய்கோ ட்டாட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின்பு நடைபெற்ற பேச்சுவார்த் தையில் விவசாயிகளின் கோரிக்கை கள் குறித்து உயர்அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக திட்டத்தின் தனி துணை ஆட்சியர் அறிவித்ததன் அடிப் படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக முற்றுகை போராட்டத் திற்கு தமிழ்நாடு விவசாய சங்க சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி, திமுக விவசாயத் தொழிலாளர் அணி மாநில துணை அமைப்பாளர், தவிச மாநிலத் துணைத் தலைவர் முனு சாமி, தவிச சேலம் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், சேலம் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சங்ககிரி செயலாளர் ராசேந்திரன், கொங்கு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட பல் வேறு அமைப்புகளின் பொறுப்பா ளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நூற் றுக்கணக்கான விவசாயிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.