tamilnadu

img

விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலியம் குழாய் அமைக்க எதிர்ப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூலை 22- விவசாய நிலங்களில் பாரத் பெட் ரோலியம் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனம் கோவை மாவட் டம், இருகூர் முதல் பெங்களூர் தேவன குந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக பாரத்பெட்ரோலிய குழாய் பதிக்க உள் ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் நாகர் கூடல் தொடங்கி சின்னம்பள்ளி, மாக்க னூர், சிடலகாரம்பட்டி, ஓஜிஅள்ளி, வள் ளூர், ஆண்டியூர், பூச்சிட்டியூர், பேடர அள்ளி, சோளகாப்பட்டி, பணைகுளம், திருமல்வாடி, எர்ரண அள்ளி ஆகிய கிரா மங்களில் உள்ள விவசாய நிலங்களில் பாரத்பெட்ரோலிய குழாய் அமைக்க உள்ளது. இதுகுறித்து, இத்திட்ட சிறப்பு துணை ஆட்சியர் தருமபுரி மாவட்ட விவசாயிக ளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள் ளர். இதில் இத்திட்டத்தின் மூலம் குழாய் அமைக்க விவசாய நிலம் கையகப்படுத் துவது குறித்து, கருத்து ஆட்சேபம் இருந் தால் 21 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக திட்ட அதிகாரிக்கு புகார் அனுப்பவும் என குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, வறட்சியான தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம் மலைபாங்கன மேடுபள்ளம் நிறைந்த பகுதி. இங்கு சிறுகுறு விவசாயிகள் உள்ளனர். இப்பகுயில் தொழிற்சாலைகள் இல்லை. ஒட்டு மொத்த வாழ்வாதாரமே விவசாய நிலம் தான். இச்சூழலில் பாரத்பெட்ரோலிய குழாய்கள் விவசாயநிலத்தில் அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகும். எனவே விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலிய குழாய் அமைக்கும் முடிவை எதிர்த்தும், இத்திட்டத்தை  கைவிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.