பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வங்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் வெளியே வர முடியாமல் உள்ளனர்; அவர்களுக்கு இந்த தீர்ப்பு நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்துள்ள AIDWA மாநில பொதுச் செயலாளர் ராதிகா, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.