tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் முன்பு மாணவர்கள் போராட்டம் -போலீசார் அடக்குமுறை

பென்னாகரம், டிச.21- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சனி யன்று பென்னாகரத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா  மணிமண்டபம் உள்ளது. நுழை வாயிலைப் பூட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு வந் தனர். அப்போது, அங்கு பாது காப்புக்கு நின்றிருந்த பாப்பாரப் பட்டி காவல் ஆய்வாளர் சதீஸ் குமார், மாணவர்கள் அனைவரும் மணிமண்டபத்திற்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் காவ லர்களுடன் கடும் வாக்குவாதம் செய்ததைத்தொடர்ந்து மூன்று பேர் மட்டும் மணிமண்டபத்தில் செல்ல போலீசார் அனுமதியளித்தனர்.  இதையடுத்து மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் இளவரசன், தருமபுரி மாவட்ட துணை செயலாளர் தமிழமுதன் ஆகியோர் சிவா நினை விடத்தில் மலரஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வந்தனர்.  இதை யடுத்து நுழைவாயிலில் நின்றிருந்த மற்ற மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். தேசிய  குடியுரிமைப் பதிவேட்டை திரும்பப்  பெறவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைப் பிடித்த  படி முழக்கமிட்டனர். போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர் சங்கத் தினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வலுக்கட் டாயமாக மாணவர்களை கைது  செய்தனர். கைது செய்யப்பட்டவர் களை திருமண மண்டபத்தில்  அடைத்து மதிய உணவு வழங்கினர்.  ஆனால் மாணவர்கள் உணவு உண்ண மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பான சூழல் நில வியதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.