tamilnadu

img

சூதாட்டத்தில் பணம் பறிக்கும் கும்பலை கண்டுகொள்ளாத காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 15- பாலக்கோடு அருகே லங்கர் சூதாட்டத் தில் பணம்பறிக்கும் கும்பல் மீது காவல்து றையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதி யாக உள்ளது. தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போன நிலையில், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது. மேலும், விவசாயிகள் வெளி மாவட்ட, வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற் போது, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மகாபாரத நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் நடைபெற்று வருகிறது. இதை சாத கமாக பயன்படுத்திக் கொண்டு  விவசாயி கள், கூலி தொழிலாளிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து சில மர்ம நபர்கள் பணம் வைத்து நடத்தப்படும் லங்கர் கட்டை சூதாட்டத்தை நடத்தி  அவர்களிட மிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர். மேலும், இரவு 10 மணிக்கு மேல் தொடங் கும் சூதாட்டம் ஒட்டர்திண்ணை, ஜிட்டாண் டஹள்ளி, சோமனஹள்ளி, கோவிலூர், குத்தலஹள்ளி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இரவுக்கு பல லட்சம் ரூபாய் சூதாட்டத்தில் வைத்து விளை யாடுகின்றனர். இந்த சூதாட்டத்தை கண்டுகொள்ளா மல் இருக்க காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுப் பதாக கூறப்படுகிறது. இதனால்  பணம் பறிக்கும் சூதாட்டம் நிகழ்ச்சியை கண்டு கொள்வதில்லை. இந்த சூதாட்டத்தில் பணம், தங்கநகை, இருசக்கர வாகனம், வீட் டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவை இழந்து ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்படுவது மட்டு மின்றி,  கடனாளிகளாகவும்  பல தற்கொலை கள் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே, கிராமபுறங்களிலுள்ள ஏழை, பாமர மக்கள் பணத்தை இழந்து வாழ்க் கையை தொலைத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்படுவதால்  லங்கர் கட்டை சூதாட் டத்தை தமிழக அரசுக்கு தடைவிதிக்கவும், காவல்துறை அதிகாரிகள் துறை சார்ந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.