districts

img

இ.சி.ஆர். சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜன.7- செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.  இவர்களுக்கு மீன் பிடிப்பது பிரதான  தொழிலாகும். இதே போன்று செய்யூர்  வட்டத்தில் உள்ள கடற்கரை பகுதி கிராமங்களில் மா, பலா, தென்னை, முந்திரி பயிரிடுவது பிரதான தொழி லாக உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களின் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதிகளுக்கு கொண்டு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பள்ளி,கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், நோயாளி கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக  செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் முதல் மாவட்ட எல்லையான வெண்ணாங்குபட்டு வரை சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் சென்னையிலிருந்து கோவளம் மாமல்லபுரம் வரை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றது. ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராமங் களை இணைக்க நகரப்  பேருந்துகள்  இயக்கப்படுவதில்லை இதனால் அப்பகுதி மக்கள் சேர் ஆட்டோக் களையே நம்பி உள்ளனர்.

கல்பாக்கத் தில் இயங்கிவரும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் மட்டும் சுமார்12 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் பணி செய்துவருகின்றனர். இவர்கள் வந்து செல்வதற்கு கூட போதிய நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மே.லிங்கன்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ெஜயந்தி ஆகியோர்  இணைந்து இக்கோரிக்கையை முன்வைத்து கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணி மனை மற்றும் செங்கல்பட்டு பணிமனை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். அதில் கல்பாக்கம் அணுசக்தி துறை சார்ந்த நிறுவனங்களில்  12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர் இதனைத் சார்ந்து நகரப் பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோன்று 50க்கும் மேற்பட்ட  கடற்கரை மீனவ  பகுதி மக்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேலைக் காகவும் வியாபார நோக்கிலும 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் உழைப் பாளி பெண்கள், அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் அனைவருக்கும் சாதாரண  கட்டணத்துடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி  செய்து கொடுக்கும் வகையில் கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணி மனையை மையமாக வைத்து மரக்கா ணம், கோவளம், கேளம்பாக்கம், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகளை இயக்கிட வேண்டும் என தெரிவித் துள்ளனர்.