tamilnadu

img

சமுதாயக் கூடத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.18- தருமபுரி மாவட்டம், தாளநத்தம் கிராமத்தில் உள்ள  சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றி யத்துக்குள்பட்டது தாளநத்தம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் டி.அய்யம்பட்டி, தாளநத்தம், காவேரிபுரம், நொச்சிக்குட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.  இந்நிலையில் தாளநத்தம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் தன்னிறைவுத் திட்டத்தில் கீழ் 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக் கூடத்தில் குடிநீா், சமையல் கூடம், சுற்றுச்சுவா், கழிப்பிடம், மின் விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து வசதி களும் உள்ளன.  இந்த நிலையில் சமுதாயக் கூடம் பயனற்று  பூட்டியே உள்ளது. மேலும் சமுதாயக் கூடத்தில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் திருடப் பட்டுள்ளன. அதேபோல், சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகிறது. எனவே, தாளநத்தம் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.