tamilnadu

விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்குக

.தருமபுரி, ஜன.28 - 60 வயது நிறைவடைந்த விவ சாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய மாக ரூ.3 ஆயிரம் வழங்குமாறு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் அரூர் ஒன்றியப்  பேரவைக் கூட்டம், ஒன்றியத் தலைவர் எம்.தங்கராஜ் தலைமை யில் சனியன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், ஒன்றிய செயலாளர் வி. ஆறுமுகம்,பொருளாளர் கே. குமரேசன், மாவட்டக்குழு உறுப் பினர் சி.பழனி ஆகியோர் பேசினர்
தீர்மானங்கள்
விவசாயம் சார்ந்த வேலைகளில்  ஈடுபடும் அனைத்து தொழிலாளர் களுக்கும் 60 வயது நிறைவடைந்த வுடன் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய தொழி லாளர்களுக்கு 250 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். நிலமற்ற விவ சாய தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும். அரூர் சட்டப் பேரவைத் தொகுதி யில் தகுதியுள்ள முதியோருக்கு நிறுத்தப்பட்ட உதவித் தொகை யினை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
ஒன்றிய தலைவராக எம்.தங்க ராஜ், ஒன்றியச் செயலாளராக வி. ஆறுமுகம், பொருளாளராக எம். குமரேசன் உள்ளிட்ட 28 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப் பட்டனர். இதேபோல்,விவசாய தொழி லாளர் சங்கத்தின் மொரப்பூர் ஒன்றிய பேரவை கூட்டம் நடை பெற்றது.ஒன்றியத்தலைவர் கர்னல் ஆபிரகாம் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்.முத்து, பொருளாளர் இ.கே.முருகன்,  ஒன்றிய செயலாளர் எம்.கே. ராமன் ஆகியோர் பேசினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர் கே.தங்கராஜ், வாலி பர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் சி.வேலாயுதம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில் ஒன்றிய தலைவ ராக கர்னல் ஆபிரகாம், செயலாள ராக எம்.கே.ராமன், பொருளாள ராக இந்திராகாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.