tamilnadu

img

தண்ணீரை தனியாருக்கு விற்கும் ஊராட்சி மன்றத் தலைவர் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூலை 20 - தண்ணீரை தனியாருக்கு விற்கும் பாலக அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட் சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டத்திற்கு உட்பட்ட பாலக அள்ளி ஊராட்சி யில் ஊராட்சி மன்றத் தலைவராக முருகன் உள்ளார். இந்த ஊராட்சியைச் சேர்ந்த மேட்டுக்கொட்டாய் மக்களின் குடிநீர் பயன் பாட்டிற்காக அக்கிராமத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிராம மக்களுக்காக அமைக் கப்பட்டுள்ள போர்வெல்லிருந்து மக்க ளுக்கு தண்ணீரை வழங்காமல், அருகி லுள்ள தனியார் பால் கம்பெனி மற்றும் செங்கல் சூளைக்கு ஊராட்சி மன்றத் தலை வர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் பணத்தை பெற்றுக் கொண்டு தண்ணீரை விற்று வருகின்றனர்.

இதுகுறித்து, ஏற்கனவே நல்லம்பள்ளி பி.டி.ஓ அலுவலகத்தில் புகாரளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேட்டுக்கொட்டாய் கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வரு கின்றோம்

. ஆகவே, பொதுமக்களுக்கு தண் ணீர் வழங்காமல் முறைகேட்டில் ஈடு பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத் தலை வர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடன டியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அலுவ லகத்தில் அக்கிராம மக்கள் புகாரளித்தனர்.

மேலும், இதன்பின்னர் ஆட்சியரும் நடவ டிக்கை எடுக்கத் தவறினால், குடும்பத் தோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.