tamilnadu

img

குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்ப பெறுக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 19- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் ஜஹாங்கீா் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், பொரு ளாளா் அன்சா், மாவட்ட துணைச் செயலா்கள் இஸ் மாயில், அப்துல் கபூா் ,இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் பைரோஸ்ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய குடிமக்கள் கணக்கெடுப்புச் சட்டம், தேசிய குடிமக்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், இந்திய அரசியலைப்புச் சட்டத்தையும், மதசார்பின்மையை யும் பேணி காக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.