tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்கள் மீது போடப்பட்ட அபராதம், வட்டி, ஜிஎஸ்டி திரும்ப பெறுக! அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!

திருச்சிராப்பள்ளி,ஜூன் 23- திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர்கள் சிஐடியு லெனின், தொமுச ரவிக் கமார், ஏஐடியுசி ராமச்சந்திரன், தொவிமு சார்லஸ், பிஎம்எஸ் கோபு ஆகியோர் டாஸ்மாக் திருச்சி மண்டல மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :  கடந்த 24.3.2020 அன்று தமிழக மெங்கும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டதை அடுத்து, டாஸ்மாக் கடைகளை ஒரு வார காலம் விடுமுறை என ஊழியர்களுக்கு உத்தரவு வந்தது.  இதையடுத்து மதுபான விற்பனை பணத்தை கடையில் உள்ள பண பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து ஊழி யர்கள் பூட்டி விட்டனர். பாதுகாப்பு காரணமாக கடைகளில் இருப்பு உள்ள சரக்குகளை ஒப்படைக்க சொல்லியும், கடைகளில் பண பெட்டகத்தில் இருந்த பணத்தை உடனடியாக வங்கிகளில் செலுத்துமாறும் மாவட்ட நிர்வா கத்திடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்தது.  இந்நிலையில் ஊழியர்கள் அந்த பணத்தை அந்தந்த வங்கி கணக்குகளில் செலுத்தி விட்டனர்.

 இதையடுத்து வங்கியில் செலுத்திய பணத்தினை ஏதோ கையாடல் செய்த பணம் போல் சித்த ரித்து அந்த பணத்திற்கு நிர்வாகம் 50சதவீதம் அபராதம், 2 சதவீதம் வட்டி, 12 சதவீத ஜிஎஸ்டி விதித்துள் ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊழியர்கள் மீது போடப்பட்ட அபராதம், வட்டி, ஜிஎஸ்டி தொகைகளை திரும்ப பெற வேண்டும்.  மேலும் கொரோனா காலத்தில் பணி புரியும் அனைத்து கடை பணியாளர்களுக்கும் உடனடி யாக கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டும். கொரோனா தொற்று  காரணமாக கடைகள் செயல்படும் நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும். மற்ற அரசு துறை ஊழியர்களை போல டாஸ்மாக் ஊழியர்களுக்கும் 50 லட்சத்திற்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும். இரவு 8 மணிக்கு கடைகள் மூடப்படுவ தால் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாலை மணிக்கு மேல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.