tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்

நாமக்கல், ஆக. 16- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள் கையை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத் தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள் கையை திரும்பப்பெற வேண்டும். 2020 வருடம் டிசம்பர் வரை நியாய விலைக்கடையில் இலவச பொருட்கள் வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்க காலத்தில் வேலை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாதம்  ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கத் தினர் எருமப்பட்டி ஒன்றியத்தில் பல்வேறு இடங் களில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.  இந்நிகழ்வில், சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.