திருவாரூர், நவ.15- அகில இந்திய அளவில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ள சிஐடியு வேலை நிறுத்தத்தை முன்னிட்டும், தையல் தொழிலாளர்களின் கோ ரிக்கைகளை வலியுறுத்தியும் நவ.19 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத் தில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுவ தென சிஐடியு, தையல் சம்மேளனம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் சிஐடியு அலுவல கத்தில் மாநில தலைவர் பி.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் எம். மகாலட்சுமி மாநிலக்குழு முடிவு களை விளக்கி பேசினார். மாநில சம்மேளன பொதுச் செயலாளர் ஐடா ஹெலன், பொருளாளர் ஆர்.மாலதி, நிர்வாகிகள், சந்தியா, கீதா, கோவிந்த சாமி, மனோகரன், சாரல், பிரமிளா ராஜேந்திரன், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது, அகில இந்திய மாநாட்டு வேலைகளில் பங்கேற்பது, நவம்பர் 19 பிரச்சார இயக்கத்தில் பங்கேற்பது, மகளிர் கூட்டுறவு தையல் கலை தொழிலா ளர்களுக்கு தையல் கூலி கூடுதலாக உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.