தஞ்சாவூர், மே 29- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், தையல் தொழிலாளர்கள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் அறிவு ரைப்படி, டாக்டர் விக்னேஷ் குடும்பத்தின் சார்பில், முன்னாள் ஒன்றியக் கழக பொறுப்பா ளர் என்.எஸ்.சேகர் முன்னிலையில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.