tamilnadu

ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கையை திரும்ப பெறுக ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.5- தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நிலு வையில் உள்ளதால், மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

எனவே, அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பபெற வேண்டும். கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை கைவிட கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திர ளானோர் கலந்து கொண்டனர்.