கடலூர், மே 16- தனது பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா ஆயிரம் ரூபாயை பள்ளியின் தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சியான வழங்கினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள் ளது தொழுதூர் கிராமம். இங்கு அமைந் துள்ள அரசு ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளியில் 41 மாணவ, மாணவிகள் பயின்ற வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகஜோதி பணியாற்றி வரு கின்றார். மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோ ருடன் பள்ளிக்கு வர வேண்டுமன்று தலைமை ஆசிரியர் தகவல் அனுபினார். கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பள்ளிக்கு ஏன் தலைமை ஆசிரியர் அழைழக்கிறார் என்று பெற்றோர்களிடம் கேள்வியெழுந்தது. எனினும், பள்ளிக்குச் சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதார பாதிப்பினை சந்தித்த பெற்றோர் களுக்கு தலைமை ஆசிரியர் ஜெகஜோதி தனது பணத்திலிருந்து தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். மேலும், பள்ளியில் துப்பு ரவு பணியாளர், மதிய உணவு சமைப்ப வர் ஆகியோருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். இவ்வாறு தனது சொந்த நிதி யிலிருந்து 43 ஆயிரம் ரூபாயை நிவாரண மாக வழங்கினார். உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் நெகிழ்ச்சி யோடு நாதழுதழுக்க தலைமையாசிரி யைக்கு நன்றி தெரிவித்தனர். தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவ-மாணவிகள் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை உடனே செலுத்த வேண்டுமென கடிதம் அனுப்பி வரும் நிலையில், தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சொந்த பணத்தை வழங்கிய தலைமை ஆசிரியையை கிராமமே பாராட்டி மகிழ்ந்தது. தலைமை ஆசிரியர் ஜெகஜோதி கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் அதேப்பள்ளியில் ஆசிரியையாக வும், 2011 ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்று தலைமையாசிரியராக பணிபுரிந்து வருவ தும் குறிப்பிடத்தக்கது.