tamilnadu

img

சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக தலைமையாசிரியர் மீது புகார்

வேலூர், டிச.9- வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரி யர் வி.பாரதி. இவர் இப் பள்ளியில் 11 வருடங்களாக அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இப் பள்ளியின் தலைமை ஆசி ரியர் எம்.முருகன். இவர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஆசிரியை பாரதியிடம் தரக்குறைவாக பேசுவது, சாதியின் பெய ரைச் சொல்லித் திட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஆசிரியை பாரதி தனது முதுகலைப் படிப்பை முடித்து பதவி உயர்வுக்காக உண்மைத்தன்மை கோரும் சான்றிதழ் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். தலைமை யாசிரியர் முருகன் அவரது விண்ணப்பத்தை காலம் தாழ்த்தி பல்கலைக்  கழகத்திற்கு அனுப்பிய தோடு மட்டுமில்லாமல் பல் கலைக்கழகத்திலிருந்து சான்று வந்தபிறகும் அதனை மாவட்ட கல்வி அலு வலருக்கு அனுப்பி வைக்கா மல் நிறுத்தி வைத்துள்ளார்.

பின்பு கடந்த இரு வாரங் களுக்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் முதுகலை பட்ட தாரி ஆசிரியர்  உண்மை தன்மை கோரும் சான்றிதழு டன் கூடுதலாக இணைக்கப் பட வேண்டிய பள்ளி சான்றி தழ்களில் கையொப்பம் பெற காலை பள்ளிக்கு ஆசி ரியை பாரதி அவரது சகோ தரருடன் வந்தபோது அவரை மிகவும் கேவலமாக  திட்டியதோடு அவரின் சகோ தரரையும் திட்டியுள்ளார். இதனையடுத்து ஆசிரியை பாரதி தலைமையாசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் ஆசி ரியை பாரதி மற்றும் தலை மையாசிரியர் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகு மாறு தெரிவித்துள்ளார்.