தருமபுரி, பிப்.22- சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தோழர் எஸ்.காளி முத்து கல்வி மையத்தின் சார்பில் கேங்மேன் எழுத்து தேர்விற்கான பயிற்சி மையம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் சனியன்று துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் பணிக்கு உடல் தகுதி தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக எழுத்துத் தேர்வு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை யொட்டி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, தோழர் எஸ்.காளிமுத்து பயிற்சி மையம் சார்பில் கேங்மேன் பணி எழுத்துத் தேர்விற்காக பயிற்சி மையம் தரும புரி சிஐடியு அலுவலகத்தில் துவங்கப்பட் டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் டி.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி. ஜீவா பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மின்துறை பொறி யாளர் அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் எம்.பனிமலர், பொறியாளர் ராஷிதா ஆகியோர் எழுதுத் தேர்வுக்கு பயிற்சி அளித்தனர். மேலும், மாவட்ட பொருளாளர் எம்.ஜெயக்குமார், கோட்ட நிர்வாகிகள் எம்.காளியப்பன், ஆர்.செந்தில் குமார், வி.சீனிவாசன், டி.கோபி, பிஎஸ் என்எல்இயூ மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஏ. மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.