தருமபுரி, ஜூன் 12- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணவு பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் இயக்குனரின் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியக தருமபுரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் தீயணைப்பு துறை காவல்துறையினர் தீவிபத்து ஏற்பட்டால் மீட்புபணி செய்வது, விபத்துகளில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வது தீயில் சிக்கிகொண் டோரை எப்படி காப்பாற்றுவது, தீயில் சிக்கிக்கொண்டால் எவ்வாறு தங்களை காப்பாற்றி கொள்வது என்பது குறித்து தீயணைப்பு காவல்துறையினர் செயல் விளக்கமளித்தனர். மேலும், வீடுகளில் கேஸ்சிலிண்டர் கசிந்தால் எப்படி தீவிபத்துக்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும் விளக்கம ளித்தனர். இந்நிகழ்ச்சியில் தீய ணைப்புதுறை மாவட்ட அலுவலர் பொறுப்பு ஆனந் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டணர். இதேபோல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி யில் உள்ள அரசு பள்ளி யிலும் தீத்தடுப்பு விழிப்பு ணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.