tamilnadu

img

தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பதா? மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 3- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராகவும், தொழி லாளர் நலசட்டங்களை சீர்குலைப் பதை கண்டித்தும் தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. 44 வகையான தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புக ளாக மாற்றுவதை கைவிட வேண் டும். மத்திய பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதிகுறைப்பு செய்ததை கைவிட வேண்டும். எல் ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு விற்க கூடாது. முறைசார தொழிலாளர்க ளுக்கு சமூக பாதுகாப்பை உரு வாக்க வேண்டும். நலவாரிய பண பலன்களை இரட்டிப்பாக்க வேண் டும். விவசாயிகள், விவசாய தொழி லாளர்களை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உதவித் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலை யம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ஜி.நாகரா ஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி. கலாவதி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், மாவட்டச் செயலாளர் பி.மணி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கே.மோகன், மாவட்டச் செயலா ளர் எம்.ராஜேந்திரன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் கே.அன்பு மணி, மாவட்டச் செயலாளர் பி. எம்.சண்முகராஜ், ஏஐசிசிடியு மாநில செயலாளர் கே.கோவிந்த ராஜி, மாவட்டச் செயலாளர் சி. முருகன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் எம்.அர்ச்சுணன், பேர வைச் செயலாளர் ஆர்.முருகானந் தம்  ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.