india

img

திடீர் மரணத்துக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல! – ஒன்றிய இணை அமைச்சர் பதில்

இளம் வயதினர் திடீர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி-யின் கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்துள்ளார்

35 முதல் 55 வயதுடையவர்களுக்கு திடீர் மாரடைப்பு, இதய நோய்கள் வருவதற்கு கோவிட் தடுப்பூசி காரணமா என ஆய்வு நடத்தப்பட்டதா? என்று திமுக எம்.பி. கனிமொழி சோமுவின் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த, ஒன்றிய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் 18-45 வயதுடையவர்கள் திடீர் மரணம் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர், கடந்த 2023-ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரை ஆய்வு நடத்தியது. அதில், கோவிட் தடுப்பூசி ஒருமுறை எடுத்துக் கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும், 2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதும் தெரியவந்ததாக தெரிவித்தார்.  இளம் வயதினர் திடீர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்றும், முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையாக உடற்பயிற்சி செய்தது, அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் இப்படி திடீர் மரணம் அடைந்தது ஆகிய பின்னணிகளே இந்த திடீர் மரணங்களுக்குக் காரணம் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தாகவும் அவர் பதிலளித்துள்ளார்.