tamilnadu

img

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், பைக் டேக்ஸியை தடை செய்யவும், ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு தரவும், 12வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்திரவுபடி உயர்த்திவும், அரசின் ஆட்டோ செயலியை (Auto App) உடனே துவக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, எல்.எல்.ஃப் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.