தருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்டத்தில் திங்களன்று கொரோனாவி னால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (52). இவர் அசாம் மாநிலத்தில், பிஎஸ்என்எல் அலு வலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விருப்ப ஓய்வில் கடந்த சில நாட்களுக்கு முன், சொந்த ஊர் திரும்பி யுள்ளார். இதனைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினர் நிரஞ் சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொண்டனர். இதில் நிரஞ்சன் உட்பட குடும் பத்தார் அனைவருக்கும் தொற்று உறுதியானது.
இதைய டுத்து, அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சன் திங்களன்று சிகிச் சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், தருமபுரி மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டது. இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை யும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.