tamilnadu

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்திடுக ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு

தருமபுரி, செப்.3- புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை  ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  நிறைவேற்ற வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ போராட்ட  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஜாக்டோ-ஜியோ தருமபுரி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் சமூகநீதிக்கு எதிரான தேசிய புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வியை  அழித்தொழிக்கின்ற அரசாணை 145ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள 17பி ஒழுங்கு நடவ டிக்கைகள் மற்றும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும்.  மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 6  ஆம் தேதியன்று ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, செப்.13ஆம் தேதியன்று கல்வி மாவட்டங்களில் பேரணி,  செப். 24ஆம் தேதியன்று மாவட்ட தலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், தமிழா சிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இராசா.ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் பி.எம். கெளரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.