தருமபுரி, ஜன. 26- தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையின் அணிவ குப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட் டத் தியாகிகளை கௌரவித்து 40 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலு வலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 80 ஆயிரமும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 11 பயனாளிக ளுக்கு ரூ.69 லட்சத்து 16 ஆயிரமும், தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சிதிட்டம் 4 பயனாளி களுக்கு ரூ.92 ஆயிரத்து 780-ம், மகளிர் திட்டம் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சமும், முதன்மை வங்கி மேலாளர் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரமும், என மொத்தம் 40 பயனாளி களுக்கு ரூ. 3 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 780 மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பொன்னாடை போர்த்தி கௌர வித்தார்.23 காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், அரூர் சார் ஆட்சியர் எம்.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், அனைத்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.