திருக்கோவில் யூனியன் வழங்கியது
சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு திருக்கோ வில் யூனியன் சார்பாக திருக்கோயில் பணியாளர்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கோவில்களில் பணிபுரி யும் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியார்கள், பூசாரிகள், காவலர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் வரு மானம் இன்றி பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழ்நாடு திருக்கோயில் யூனியன் சார்பாக கோயில் பணி யாளர்களுக்கு சென்னை கோட்டத்திற்குட்பட்ட வில்லி வாக்கம் பகுதி சார்பில் 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவா ரணப் பொருட்கள் 50 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் மாநில பொதுச் செயலாளர் முத்துச்சாமி, பாலசுந்தரம், சென்னை கோட்டத் தலைவர் தன சேகர், செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் குகன் செந்த மிழ் செல்வி, வேலாயுதம் மற்றும் வில்லிவாக்கம் தலை வர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.