districts

img

தேனி அருகே மக்கள் தொடர்பு முகாமில் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தேனி, ஜூன் 16- தேனி வட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்தி ரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமை யில் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.20.71 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சாந்தி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மை யினர் நல அலுவலர் விமலாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா, தேனி வட்  டாட்சியர் சரவணபாபு, தேனி ஊராட்சி ஒன்றி யக்குழுத்தலைவர் எம்.சக்கரவர்த்தி, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.