tamilnadu

சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலம்

தருமபுரி, ஜூன் 3-இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது மற்றும் பழுது நீக்கும் பயிற்சி இலவசமாக பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. மேலும், பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பெற விரும்பும் பயிற்சி மற்றும் செல்பேசி எண்ணுடன் நேரிலோ அல்லது அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி-5 மற்றும் 04342-230511, 04342-234464, 9442274912, 8667679474 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.