tamilnadu

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தருமபுரி, பிப். 9- பாப்பிரெட்பட்டி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்ச ரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உத விகளை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு  குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமை வகித்தார். இதில் உயர்கல் வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 682 பயனாளிகளுக்கு  ரூ.2  கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம்  மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பி னர்கள், சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.