இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்திய தீவுகள் (விண்டீஸ்) அணியுடன் விளையாடப் போகிறோம் என்றாலே, 1970-1990 இடைப்பட்ட காலங்களில் எதிரணி வீரர்கள் நடுங்குவார்கள்.அந்தளவுக்கு கிரிக்கெட் உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரள வைத்த விண்டீஸ் அணியை பற்றி இன்று பார்க்கலாம்... விண்டீஸ் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்றாலும் அதிரடி பேட்டிங் தான் இவர்களின் முக்கிய பலம்.பந்து எந்த விகிதத்தில் வந்தாலும் ஸ்ட்ரெய்ட், லாங் ஆன், லாங் ஆப் பகுதிகளில் எளிதாக சிக்ஸர் அடித்து அசத்துவார்கள். இந்த மூன்று பகுதி களில் சிக்ஸர் அடிப்பது சாதாரண விஷயம் அல்ல. கணிப்பு சிறிது தப்பினால் பந்து ஸ்டெம்பிற்குள் புகுந்து விடும்.பேட்டிங் செய்யும் பொழுது பந்து, ரன்கள் விகிதங்களை கணக்கில் கொண்டு விளையாடமாட்டார்கள்.எப்படி சிக்ஸர் அடிக்கலாம், எந்த பந்தைமைதானத்தை விட்டு வெளியே அனுப்பலாம் என்பதை மனதில் கொண்டு விளையாடுவார்கள். 100 மீ தூரத்திலும் சர்வசாதாரணமாக சிக்ஸர் அடிக்கும் உடல் வலு பெற்றவர்கள். ஆனால் சுழற்பந்துவீச்சில் பேட்டிங் செய்ய திணறுவார்கள்.
பேட்டிங் இப்படி என்றால் பந்துவீச்சில் சற்று வித்தியாசமான மனநிலைகொண்டவர்கள். விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் ரன்கள் அடிக்க கூடாது என்ற எண்ணத்துடன் அதிக டெத் ஓவர்களை வீசுவார்கள்.மிதவேகம் மற்றும் சுழற்பந்துவீச்சை தான் விரும்பி வீசுவார்கள். பீட்டிங்கில் சறுக்கல் இல்லாமல் பாய்வார்கள்.எல்லைகோட்டை விட்டு பந்து வெளியே சென்றாலும் தடுத்து கேட்ச் செய்வார்கள். மூன்று பிரிவிலும் விண்டீஸ் வீரர்கள் நல்ல திறன் படைத்தவர்கள் என்றாலும், உள்ளூர் தொடர்களில் அந்நாட்டு வீரர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக நாட்டுக்காக பெரிய அள வில் எதையும் சாதிக்கவில்லை.டி-20 போட்டிகளில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றி வருகின்றனர்.வரவிருக்கும் இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் விண்டீஸ் எந்தளவில் சாதிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...