tamilnadu

img

இந்திய அணி நிதான ஆட்டம்

புனே டெஸ்ட் 

இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 203  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேவில் வியாழனன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் அசத்திய ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடியைத் தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா துவக்கத்திலேயே பிரித்தார். 14 ரன்கள் எடுத்த பொழுது ரோஹித் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய புஜாரா அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து, இருவரும் சீரான வேகத்தில் ரன் சேர்த்து அரைசத மடித்து அசத்தினர்.  அரைசதமடித்த அடுத்த சில நிமிடங்களில் புஜாரா (58),  பந்துவீச்சில் பெவிலி யன் ரபடா திரும்பினார். தனது நங்கூரமான ஆட்டத்தை 2-வது டெஸ்ட் போட்டியிலும் தொட ர்ந்த அகர்வால் பவுண்டரி விளாசுவதில் ஆதிக்கம் செலுத்தி (108 - 16 பவுண்டரி, 2  சிக்ஸர்) சதமடித்தார். அகர்வால் அடுத்த சில  நிமிடங்களில் ரபடா பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி, ரஹானே ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்கக் கடுமை யாகப் போராடினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி(63), ரஹானே(18)  ஆகி யோர்  ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அதிகபட்சமாக ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.