இந்திய கிரிக்கெட் அணியில் 4 பயிற்சியாளர்கள் உள்ளனர். தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அரு ணும், பேட்டிங் பயிற்சியாள ராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் உள்ளனர். இவர்களின் பதவிக் காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்த நிலையில், விண்டீஸ் சுற்றுப் பயணத்திற்காகப் பயிற்சியா ளர்களின் பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வுக் கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரை வில் வெளியிட உள்ளது. பிசியோதெரபிஸ்ட், அணி நிர்வாக மேலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. வெளிநாட்டு வீரர்களும் விண்ணப்பிக்க சிறப்பு வழி வகை உள்ளது. ரவி சாஸ்திரி யை தலைமை பயிற்சி யாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இத னால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.