விண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த பின் இந்தியாவுக்கு வந்தார். மும்பையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவான அறிக்கை அளிக்கவில்லை.புதனன்று உடல்நலன் குறித்து அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.