tamilnadu

img

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை யாருக்கு?

இன்று இந்தியா - வங்கதேசம் பலப்பரிட்சை

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (19 வயதிற்குப்பட்டோர்க்கு) தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, குவைத், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா - இலங்கை, ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கொழும்பு நகரில் காலை முதலே பலத்த மழை பெய்தது. ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடுவர்கள் அரையிறுதி ஆட்டத்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். லீக் சுற்று வெற்றி மற்றும் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.  சனியன்று காலை 9:30 மணிக்குக் கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. லீக் சுற்றில்  தோல்வியை ருசிக்காமல் இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியதால் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் எனத் திடமாக ஆருடம் கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மழை விளையாடுமா?

கொழும்பு நகரில் சனியன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  காற்று பலமாக  வீசினால் காலை முதலே மழை தனது ஆட்டத்தைத் தொடங்கிவிடும் என்பதால் இறுதிப்போட்டியில் மழை விளையாட அதிக வாய்ப்புள்ளது.