tamilnadu

img

கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய ஆஸி., வீரர்கள்

பாக்., கிரிக்கெட் வீரரின் தாயார் மரணம்

ஆஸ்திரேலியா விற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடருக்கான பயிற்சி  ஆட்டத்தில் விளையாடி வருகிறது.  ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான 3 நாட்களைக் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இடம்பெற்றிருந்த  பாகிஸ் தான் அணியின் இளம் வீரர் நசீம் ஷாவின் (16) தாயார் திங்களன்று இரவு மரணமடைந்தார். இதனால்  பயிற்சி ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலகி உடனடி யாக பாகிஸ்தான் சென்றார்.  நசீம் ஷாவின் தாயார் மரணத்தையொட்டி பாகிஸ்தான் மற்றும்  ஆஸ்திரேலிய “ஏ” அணி  என இரு நாட்டு வீரர்களும் கையில் கருப்புப்பட்டை யுடன் விளையாடி அஞ்சலி செலுத்தினார்கள். தங்கள் நாட்டிற்கு சம்பந்தமில்லாத நபருக்கு கருப்புப் பட்டை அஞ்சலி செலுத்திய ஆஸ்தி ரேலிய “ஏ” கிரிக்கெட் அணியை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது.