ராணிப்பேட்டையில் 2,582 பேருக்கு ரூ. 6.27 கோடி நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டை, டிச.6- அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெற்றது. வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு, 2,582 பயனாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உட்படப் பல அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
