tamilnadu

img

அமெரிக்க அதிகாரத்தின் செவுளில் அறைந்த பெண்ணின் போராட்டம்

அமெரிக்க அதிகாரத்தின் செவுளில் அறைந்த பெண்ணின் போராட்டம்'

அமண்டா நிகுயென் விண்வெளிக்குச் சென்ற முதல் வியட்நாமியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். 34 வயதான அமண்டா, 2025 ஏப்ரல் மாதம் ‘ப்ளூ ஆர்ஜின்’ (Blue Origin) விண்கலத்தில் 11 நிமிடங்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவருடன் பிரபல பாடகி கெட்டி பெர்ரி, ஊடகவியலாளர் கெய்ல் கிங், லாரன் சான்செஸ் ஆகியோரும் சென்றனர். இந்தப் பயணம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் இதற்காகச் செலவிடப்படும் வளங்கள் குறித்துப் பலதரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. விண்வெளித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்களின் லாப வெறி இயற்கையையும் பூமியையும் கடும்  பாதிப்புக்கு உள்ளாக்கும் சூழல் உள்ளது.  எனினும் இந்த விஷயத்தில் அமண்டாவின்  கடந்த கால வாழ்க்கை பற்றி நாம் கட்டா யம் தெரிந்து கொள்ள வேண்டும். அமாண்டா விண்வெளி வீரர் மட்டு மல்ல அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சமூக ஆர்வலர். இவரது பெற்றோர்கள் வியட்நாமில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள். அமண்டா அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த வர். பட்டம் பெற்ற பிறகு விண்வெளி வீரராக  வேண்டும் அல்லது சி.ஐ.ஏ (CIA) உளவுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது  தான் அவரது லட்சியம். இத்தகைய சூழ லில் கல்வி முடிய மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த சூழலில் 2013 ஆம்  ஆண்டு ஒரு விருந்துக்குச் சென்ற இடத்தில்  அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்  கப்பட்டார். அதனால் அவரது வாழ்க்கையே  மாறியது அழகான கனவுகள் அனைத்தும் சிதைந்து போயின. அமெரிக்கச் சட்டப்படி, இத்தகைய குற்றங்களுக்குப் புகார் அளிக்க 15 ஆண்டு கள் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால்,அதிலும் ஒரு விசித்திரமான விதி இருப்பது அமண்டாவுக்கு தெரிய வந்தது. அது என்ன தெரியுமா? பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்கள் (Rape kit) வெறும் 6 மாதங்க ளில் அழிக்கப்பட்டுவிடும் என்பதுதான். இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி! ஆதாரங்கள் மூலமாக சில கொலை  வழக்குகளில் பல ஆண்டுகள் கழித்துக்கூட  குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள். ஆனால்,  பெண்களைப் பாதிக்கும் இந்த வழக்கில் மட்டும் ஏன் ஆதாரங்கள் இவ்வளவு சீக்கி ரம் அழிக்கப்படுகின்றன? என நமக்கு கேள்வி வருகிறதல்லவா? இதே கேள்வியை அவரும் எழுப்பி னார். இந்தக் கொடுமை ஒருபுறம் இருக்க அமண்டாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்து வமனை அவரிடம் சுமார் 4,800 டாலர்கள்  அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் கட்ட ணம் வசூலித்தது. ஒரு குற்றத்திற்கான ஆதாரத்தைச் சேகரிக்கப் பாதிக்கப்பட்ட வரே பணம் செலுத்த வேண்டிய அவல  நிலை நிலவும் ஒரு சமூகத்தை வைத்தி ருக்கும் ஒரு அரசு எவ்வளவு ஆணாதிக்க மற்றும் கொடூரமான இரக்கமற்றதாக இருக்கும் என யோசித்து பாருங்கள். இந்த அநீதியை எதிர்த்துப் போராட அமண்டா முடிவு செய்தார். அவர் தன் வலியையே ஒரு ஆயுதமாக மாற்றினார். ‘Rise’ என்ற அமைப்பை உருவாக்கி, தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றிணைத்தார். அவர்கள் இணைந்து ‘பாலியல் வன்  கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக் கான உரிமைகள் மசோதாவை’ (Sexual Assault Survivors’ Bill of Rights) உரு வாக்கினார்கள். இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன: 1.     சட்டப்பூர்வக் காலம் முடியும் வரை ஆதாரங்களை அழிக்கக் கூடாது. 2.     அந்த ஆதாரங்களைச் சேகரிக்கப் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தத் தேவையில்லை. 2016-ஆம் ஆண்டு, அன்றைய அமெ ரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த மசோதா வில் கையெழுத்திட்டு அதைச் சட்டமாக்கி னார். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா வின் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற 91 சட்டங்கள் இவர்களால் கொண்டு  வரப்பட்டுள்ளன. இதற்காக 2019 இல் அமண்டா அமைதிக்கான நோபல் பரிசுக்கு  முன்மொழியப்பட்டார். தன் வாழ்க்கையில் நடந்த வலிகளை ‘Saving Five’ என்ற புத்தகமாக அவர்  எழுதியுள்ளார். “சட்டம் எனக்கு எதிர்காலத் தில் நீதி பெறுவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. நான் உரக்க கத்தினேன், இந்த உலகம் அதைக் கேட்டது என்பதில்  எனக்குப் பெருமைதான்” என பெண்களின்  உரிமைகளை துச்சமென மதித்திருந்த அமெரிக்க அரசின் செவுளில் அறையும் பதிலை அவர் கூறியுள்ளார்.