tamilnadu

அரசுப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கி தரக்கோரி விசைத்தறி தொழிலாளர் சங்கம் மனு

அரசுப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கி தரக்கோரி விசைத்தறி தொழிலாளர் சங்கம் மனு

நாமக்கல், டிச.16- அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அடிப் படை தேவைகளுக்கு நிலம் ஒதுக்கி தரக்கோரி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் ஒன்றியம், பாப்பம்பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகம் அமைந்துள்ள நிலம் கடந்த 1980  ஆம் ஆண்டு சேசாயி காகித ஆலை அமைந்திட, தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலமாக உள்ளது. இதில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் அப் போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் பரிந்துரையின் பேரில், தற்போது பள்ளி அமைந்திட வழங்கப்பட்ட நிலமாகும். இதே நிலப்பகுதியில் சுமார் அரை  ஏக்கர் நிலம் இப்பள்ளியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தினை இப் பள்ளியின் நிலத்தோடு இணைப்பதன் மூலம் இப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு அது உதவும். இது ஊர்  பெரியவர்கள் மற்றும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலமம் எடுப்பு செய்து தர  வேண்டும். நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விடுக்கப்படும் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட நிலம் காகித ஆலைக்கு வருவாய் துறை மூலம் அரசு கொடுத்த தான நிலமாகும். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படாத இந்த அரை ஏக்கர் நிலத்தினை இப் பள்ளியின் எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த சிறிய அள விலான நிலப்பகுதியை அரசுப்பள்ளிக்கு வழங்கிட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இந்த நிலப் பகுதியை பள்ளிக்கு வழங்கிட வேண்டுமென கிராம பஞ்சாயத்தின் அமைப்பான கிராம சபை கூட்டம் 2024 மற்றும் 2025  ஆம் ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள் கிறோம் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.