tamilnadu

img

“எஸ்ஐஆர் வேண்டாம் - வயது வந்தோர் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” தில்லியில் சிறப்பு மாநாடு ; உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பங்கேற்பு

“எஸ்ஐஆர் வேண்டாம் - வயது வந்தோர் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” தில்லியில் சிறப்பு மாநாடு ; உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பங்கேற்பு

புதுதில்லி பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடை பெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த  (Special Intensive Revision - SIR) நட வடிக்கைக்கு மத்தியில், சிவில் சமூக அமைப்பு கள் சனிக்கிழமை அன்று தில்லியில் ஒன்று கூடின.  பாரத் ஜோடோ அபியான், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டமைப்பு (NAPM) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “எஸ்ஐஆர் வேண்டாம் (No SIR) - வயது வந்தோர் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் சிறப்பு மாநாடு தில்லி ரபி மார்க்கில் உள்ள அரசியலமைப்பு மையத்தில் நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.பட்நாயக், கல்வியாளர் பேரா சிரியர் நிவேதிதா மேனன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ், ஊடகவியலாளர் பாமெலா பிலிப் போஸ், அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், விசார ணைக் குழுவாகவும் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் போது விசாரணைக் குழு எஸ்ஐஆர் நடவடிக்கையால் பாதிக்கப் பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டறிந்தது. இந்த பொது விசாரணையின் போது, ​​10 மாநி லங்களைச் சேர்ந்த 16 குழுக்கள் சாட்சியங்க ளை வழங்கின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரைச் சேர்ந்த மதரி சமூகத்தைச் சேர்ந்த வர்கள்,”தலைமுறை தலைமுறையாக தெருக்கூத்து நிகழ்வுகளை நிகழ்த்தி வரு கிறோம். ஆனால் எஸ்ஐஆர்-இன் போது நிரந்தர முகவரிகளைக் காட்ட ஆவணங்கள் இல்லாத தால் நாங்கள் முதன்முறையாக வாக்குரி மையை இழந்துள்ளோம்” என கவலையுடன் கூறினர்.   அதேபோல பீகாரின் புல்வாரி ஷெரீப்பைச் சேர்ந்த ஜித்னி தேவி வாக்காளர் பட்டியலில் இருந்த போதிலும் எஸ்ஐஆர்-இன் போது தான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகக் காணொலி மூலம் குற்றம்சாட்டினார். ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தற்கொலை செய்து  கொண்ட ஒரு வாக்குச்சாவடி நிலை அதிகாரி யின் குடும்பத்தினரும் எஸ்ஐஆர் அழுத்தத்தைப்  பற்றிப் பேசினர். மேலும் திருத்தம் மேற் கொள்ளப்படும் அவசரம் குறித்தும் கேள்வி எழுப்பினர். வாக்காளர்களே மிக முக்கியமானவர்கள் விசாரணைக்குப் பின் நீதிபதி மதன் பி.லோகூர் பேசுகையில், “வாக்குச்சாவடி நிலை  அதிகாரிகள் எஸ்ஐஆர் நடைமுறையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எல்லாவற் றிற்கும் மேலாக, வாக்காளர் தான் மிக முக்கிய மானவர்கள். தேர்தல் ஆணையமோ அல்லது மற்ற அமைப்புகளோ அல்ல. தேர்தல் ஆணை யம் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆனால் எஸ்ஐஆர்-இன் போது மக்கள் தங்கள் கோரிக் கைகள் கேட்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி யுள்ளனர். இது நல்லதல்ல. தேர்தல் ஆணை யம் மக்களின் பிரச்சனைகளைக் கேட்டால், மக்களும் தேர்தல் ஆணையமும் பயனடை வார்கள்” என அவர் கூறினார். தொடர்ந்து நீதிபதி ஏ.கே.பட்நாயக் பேசு கையில்,“மக்களின் துயரங்களைக் கேட்க தேர்தல் ஆணையம் விசாரணையின் ஒரு பகு தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. எஸ்ஐஆர்-இன் தீய விளைவுகள் பெரும ளவில் வாக்குரிமையை இழந்ததோடு மட்டும் நின்றுவிடாது. பல்வேறு நலத்திட்டங்களிலி ருந்து குடிமக்களின் உரிமை பறிக்கப்படலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாரத் ஜோடோ அபியானைச் சேர்ந்த யோ கேந்திர யாதவ், “முன்பு மக்கள் அரசாங் கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப் போது அரசாங்கம் மக்களைத் தேர்ந்தெடுக் கிறது. அதாவது எஸ்ஐஆர் மூலம் அரசாங்கம் மக்களைத் தேர்ந்தெடுக்கும் சூழலை உரு வாக்கியுள்ளது” என அவர் குற்றம்சாட்டினார்.